கிரேடல் பண்ட் சிஇஓ கொலை – அறைக் கதவை உடைத்து உள்ளே புகுந்தேன் – பாதுகாவலர்

  • 5 months ago
  • 0 0

ஷா ஆலம், செப். 14 – கிரேடல் பண்ட் தலைமைச் செயல் முறை அதிகாரி நஸ்ரின் ஹசானின் அறைக் கதவை உடைத்து உள்ளே புகுந்ததாக நேப்பாளிய பாதுகாவலர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயா, முத்தியாரா ஹோம்ஸ் குடியிருப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடியிருப்பாளர் ஒருவரின் புகாரின் பேரில், நஸ்ரினுடைய வீட்டிற்குச் சென்றதாகவும், அங்கு அவரது மனைவி வெளியே நின்று கொண்டிருந்த தாக பாதுகாவலர் ராஜு குமார் பண்டிட் நஸ்ரின் தெரிவித்தார்.

மேல் மாடிக்கு ஓடிச் சென்றபோது, கதவின் ஊடே புகை வந்ததைக் கண்டு, அறைக் கதவின் சாவியைக் கேட்டபோதும் கதவை உடைக்க சுத்தியலைக் கேட்டபோது அவை வீட்டில் இல்லையென நஸ்ரினின் மனைவி சமீரா தெரித்ததாக ராஜு குமார் தெரிவித்தார். மேலும், தீயணைப்பு, மீட்புக் குழுவினருக்கு வீட்டில் தீ பற்றி எரிவது பற்றி சமீரா தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டதாக வழக்கறிஞரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் அண்டை வீட்டுக்காரர் கொடுத்த இரும்பைக் கொண்டு கதவை உடைத்தபோது, அறையில் இருந்து புகையும் நெருப்பும் வந்ததாகவும், 10 நிமிடத்த்துக்குப் பின்னர், தீயணைப்பு வீரர்கள் வந்து வீட்டை கட்டுப்பாடுக்குக் கொண்டு வந்ததாகத் அவர் தெரிவித்தார்.

தாம் அறைக் கதவை உடைத்துத் திறந்தபோது, சமீரா அறையினுள் உள்ளே செல்ல எத்தனித்ததாகவும், அவர் அலறிய தோடு, தமது கணவர் அறையில் இருப்பதாகவும் தெரிவித்ததாக ராஜு குமார் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜூன் 14இல், சமீரா இரு இளைஞர்கள் மற்றும் இன்னும் காணாமல் இருக்கும் இந்தோனேசிய மாதுவுடன் சேர்ந்து, நஸ்ரினை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

The post கிரேடல் பண்ட் சிஇஓ கொலை – அறைக் கதவை உடைத்து உள்ளே புகுந்தேன் – பாதுகாவலர் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *