குடா­நாட்­டில் 100 மில்லி மீற்­றருக்கும் அதிக மழை­வீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

  • 6 months ago
  • 0 0

யாழ்ப்­பா­ணத்­தில் அடுத்த சில தினங்­க­ளில் 100 மில்லி மீற்­ற­ருக்­கும் அதி­க­ள­வான மழை வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ன்றது. என்று வளி­
மண்­ட­ல­வி­யல் திணைக் களம் அறி­வித்­துள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் இரவு யாழ்ப்­பா­ணத்­தில் 26 மில்­லி ­மீற்­றர் மழை பதி­வா­னது.

இது தொடர்­பில் வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் விடுத்­துள்ள அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:

வடக்கு, வட­மத்­திய மற்­றும் வட­மேல் மாகா­ணங்­க­ளி­லும் திரு­கோ­ண­மலை மற்­றும் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டங்­க­ளி­லும் காற்று அவ்­வப்­போது மணித்­தி­யா­லத்­துக்கு 50 கிலோ மீற்­றர் வரை­அ­தி­க­ரித்து வீசக்­கூ­டும். நாட்­டின் தென்­மேற்கு பிர­தே­சத்­தில் தற்­போது காணப்­ப­டும் மழை­யு­ட­னான வானி­லை­யில் அடுத்த சில நாள்­க­ளில் மேலும் அதி­க­ரிப்பு ஏற்­ப­டும்.

மேல், மத்­திய சப்­ர­க­முவ, தென் மற்­றும் வட­மேல் மாகா­ணங்­க­ளி­லும் மன்­னார் மற்­றும் யாழ்ப்­பா­ணம் மாவட்­டங்­க­ளி­லும் மழையோ அல்­லது இடி­யு­டன் கூடிய மழையோ பெய்­யக் கூடிய சாத்­தி­யம் காணப்­ப­டு­கின்­றது. அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மற்­றும் பதுளை மாவட்­டங்­க­ளில் சில இடங்­க­ளில் பிற்­ப­கல் 2 மணிக்­குப் பின்­னர் மழையோ அல்­லது இடி­யு­டன் கூடிய மழையோ பெய்­யக் கூடிய சாத்­தி­யம் காணப்­ப­டு­கின்­றது.

சப்­ர­க­முவ மாகா­ணத்­தி­லும் யாழ்ப்­பா­ணம், களுத்­துறை காலி மற்­றும் மாத்­தறை மாவட்­டங்­க­ளி­லும் சில இடங்­க­ளில் 100 மில்லி மீற்­றர்­ருக்­கும் அதி­க­மான பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­து­டன் வட­மேல் மாகா­ணத்­தி­லும் கொழும்பு மற்­றும் கம்­பகா மாவட்­டங்­க­ளி­லும் சில இடங்­க­ளில் 50 மில்லி மீற்­ற­ருக்­கும் அதி­க­மான ஓர­ளவு பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இடி­யு­டன் கூடிய மழை பெய்­யும் வேளை­க­ளில் அப் பிர­தே­சங்­க­ளில் தற்­கா­லி­க­மாக பலத்த காற்­றும் வீசக்­கூ­டும். மின்­னல் தாக்­கங்­க­ளி­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை குறைத்­துக்­கொள்ள தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­துக் கொள்­ளு­மாறு பொது­மக்­கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றார்­கள் – என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *