குண்டர் கும்பல் சண்டை – இந்திய பிரஜை கைது

  • 5 months ago
  • 0 0

கிள்ளான், செப். 14 – பாதுகாப்புப் பணம் வசூல் செய்யும் வட்டாரத்தை நிர்ணயிக்கும் தகராறில் இரு குண்டர் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய பிரஜை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 5இல், 30 வயதான அந்த இருவரும் பூச்சோங், தாமான் கெம்பீரா, ஜாலான் லிந்தாங்கில் பிற்பகல் 3.30க்குக் கைது செய்யப்பட்டதாகத் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் ஏசிபி சம்சுல் அமார் தெரிவித்தார்.

விசாரணையில், இரு குண்டர் கும்பல்களும் 10 பேரோடு வந்து பூச்சோங் பகுதியில் பாதுகாப்புப் பணம் வசூலிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

இரு குண்டர் கும்பல்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்த உள்ளுர்க்காரர் ஒருவர், கைத் துப்பாக்கியை உருவி, இந்திய பிரஜையைத் தாக்கியுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்.

சோதனையில், போலீசார் ஒரு கைத் துப்பாக்கி, பயன்படுத்தப்படாத 5 துப்பாக்கிக் குண்டுகள், நான்கு கத்திகள், நான்கு ஜோடி கையுறைகள், இரு சிறிய கத்திகள், புரோட்டோன் வீரா மற்றும் மெர்சீடஸ் கார் முதலியவற்றைக் கைப்பற்றினர்.

இந்தப் பாதுகாப்புப் பண வசூலிப்பில் ஈடுபட்டிருக்கும் இதர நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட உள்ளூர்க்காரருக்கு 10 கிரிமினல் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம், சுடும் ஆயுதச் சட்டங்களின் வழி இந்த வழக்கு விசாரணை செய்யப்படும்.

The post குண்டர் கும்பல் சண்டை – இந்திய பிரஜை கைது appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *