கோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்

  • 1 month ago
  • 0 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளராக இருக்கிறேன். இந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தோ, இந்த நல்லாட்சியிடமிருந்தோ, எந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. 9 கிலோ மீற்றா் நீளமான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருக்கின்றது.

அதேபோல் துறைமுகம் பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமலிருக்கின்றது. இவ்வாறு கடந்த 2 வருடங்களில் ஒரு அபிவிருத்தியும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறான ஏமாற்றங்களினாலேயே கோட்டாவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்துள்ளோம்.

மேலும் முன்னாள் போராளியான என்னையும் என்னைபோன்ற போராளிகளையும் விடுதலை செய்ததைபோல் தமிழ் மக்கள் மீது கோட்டாபய அக்கறையுடன் செயற்படுவாா் என நம்புகிறேன்.

அந்த அடிப்படையிலேயே கோத்தாவை ஆதாிக்க தீா்மானித்துள்ளோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *