சஜித் விஞ்ஞாபனத்தில் அனைத்தும் உள்ளது – சுமந்திரன்

  • 1 month ago
  • 0 0

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்லின மக்களின் தன்மையினை கொண்டாடுவோம் என கூறியுள்ளது. பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளே அதியுடச்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என்றும் இடை நிறுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் முழுமையாக்கப்படும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவைகளை அவர் நிறைவேற்றுவார் என்று நான் கூறவரவில்லை. ஆனால் இவற்றினையெல்லாம் செய்வேன் என்று கூறக்கூடிய துணிவு அவருக்கு இருந்திருக்கின்றது – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *