சுத்தியல் மற்றும் கத்தியால் தந்தையை கொடூரமாக கொன்றோம்: 3 இளம்பெண்களின் பரபரப்பு வாக்குமூலம்

  • 3 months ago
  • 0 0

ரஷ்யாவில் நீண்ட காலமாக தங்களை துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்த தந்தையை கொடூரமாக கொன்றதாக 3 இளம்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட பல ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்துவந்த பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து விடுபடவே, தங்களது 57 வயதான தந்தையை கொலை செய்துள்ளதாக மூன்று இளம்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் 57 வயதான தந்தையுடன் குடியிருக்கும் க்ரெஸ்டினா(19), ஏஞ்சலினா(18) மற்றும் மரியா(17) ஆகிய மூவருமே, துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வரும் தங்கள் தந்தையை அவரது வேட்டை கத்தியை பயன்படுத்தி கொலை செய்துள்ளனர்.

தங்களை பாதுகாக்கவே இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையின் போது மூவரும் கூறியுள்ள நிலையில்,

சம்பவத்தின்போது பதிவான வீடியோ ஒன்றை அவர்களது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் 57 வயதான Mikhail Khachaturyan ஓய்வாக இருக்கை ஒன்றில் சாய்ந்து இருக்கிறார்.

அந்த வேளையிலேயே இளம்பெண்கள் மூவரும் அவரை தாக்கி கொலை செய்கின்றனர்.

கொலை நடந்த பின்னர் மரியா பொலிசாருக்கு தொலைபேசி மூலம் அளித்த தகவலில், தங்களது தந்தை கத்தியால் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மரியா, தமது சகோதரி ஏஞ்சலினாவுடன் இணைந்து தங்களது தந்தையை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது மூத்த சகோதரி க்ரெஸ்டினா தந்தையை கொலை செய்ய தங்களுக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் ரஷ்யாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்துள்ள தந்தைக்கு இந்த தண்டனை சரியானதே எனவும், அந்த மூனறு இளம்பெண்களையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால் கொல்லப்பட்ட Mikhail Khachaturyan-ன் உறவினர்கள், அவர் ஒன்றும் அவ்வளவு மோசமானவர் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வ்ழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மூன்று சகோதரிகளில் இருவருக்கு 8 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது 18 வயதாகும் மரியாவுக்கு சம்பவம் நடந்தபோது அதன் பாதிப்பு தொடர்பில் புரிந்துகொள்ள முடியாத வயது என நீதிமன்றம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *