சுபாஸ்கரன் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ்

  • 2 months ago
  • 2 0

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க இயக்குனர்கள் மணிரத்னம், முருகதாஸ் இருவரும் போட்டிபோடுகிறார்கள்.

விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைகா புரொடக்‌ஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை இவர் தயாரித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது அவர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறது. 

மேலும், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

இதற்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முருகதாஸ் பேசியதாவது:- கத்தி படத்தின்போது சுபாஸ்கரனை ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும். ஆனால் லண்டனுக்கு சென்றபின்னர் அவரது பின்புலம் தெரியவந்தது. அவருடன் சமீபத்தில் 4 நாட்கள் உடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை முழுவதுமாக சொன்னார். 

தாய்நாட்டில் இருந்து வெளியேறிய ஒருவன் ஒன்றுமே இல்லாமல் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார். 

முன்னதாக பேசிய இயக்குனர் மணிரத்னமும் சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதுபற்றி முருகதாசிடம் கேட்டதற்கு இருவருமே எடுக்கலாம்’ என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *