தொலைபேசி திருட்டு; நால்வர் கைது!

  • 4 days ago
  • 0 0

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் தொலை பேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில், நான்கு பேரை, இன்று (12) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம், பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகள் திருடப்பட்டதாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று (12), நல்லூர் வீதியில் வைத்து 2 சந்தேகநபர்களை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *