நான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை: கண்ணீர் விட்டு கதறிய பிரெஞ்சு பிரபலம்!

  • 3 months ago
  • 0 0

பிரெஞ்சு இயக்குநர் ஒருவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக புகார் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை என அவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

பிரெஞ்சு திரைப்பட இயக்குநரான Luc Besson (60) தன் மீது குற்றம் சாட்டியுள்ள இளம் நடிகையான Sand Van Roy (28)ஐ, தான் வன்புணர்வு செய்யவோ அவருக்கு போதை மருந்து கொடுக்கவோ இல்லை என வெளிப்படையாக மறுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை Besson தன்னை வன்புணர்வு செய்ததாக Van Roy புகார் தெரிவித்திருந்த நிலையில், புகாரை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாரீஸ் விசாரணை அதிகாரிகள் வழக்கை தள்ளுபடி செய்திருந்தனர்.

தற்போது மீண்டும் Besson மீது Van Roy புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளதையடுத்து பேட்டியளித்த Besson, பத்திரிகையாளர்கள் முன்பு தான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

ஆனால் இன்னொருபக்கம், Luc Besson வழக்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவோருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்தார் Van Roy.

 

Van Royஐயும் சேர்த்து இதுவரை ஒன்பது பெண்கள், Besson தங்களை தாக்கியதாக அல்லது துஷ்பிரயோகம் செய்ததாக புகாரளித்துள்ளனர்.

Van Royயுடன் தனக்கு தொடர்பு இருந்ததை ஒப்புக்கொள்ளும் Besson, ஆனால் தான் அவரை வன்புணர்வு செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

தான் சில தவறுகளை செய்தது உண்மைதான் என்று கூறியுள்ள Besson, என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்துவிட்டேன் என்றார்.

இவ்வளவு புகார்களுக்கும் மத்தியில் Bessonஇன் மனைவியான Virginie, அவருக்கு ஆதரவாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *