பாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங் 

  • 6 months ago
  • 0 0

ஈப்போ, ஆகஸ்ட் 23 –  தனது இந்தோனேசியப் பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் போல் யோங் மீது இன்று காலை ஈப்போ செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டை போல் யோங் மறுத்துள்ளார். அடுத்தக் கட்ட விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி தன் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக, மறுநாள் 8ஆம் திகதி அப்பணிப்பெண் போலீஸ் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று, போல் யோங்கை சிக்க வைக்க ஆடவர் ஒருவருக்கு 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்தாகக் கூறி அக்கட்சியின் ஆலோசகரும் மாநில சபாநாயகருமான டத்தோ ங்கே கூ ஹாம் நேற்று இரவு 10.45 மணியளவில் ஈப்போ மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த பணத்தைப் பெற்றது யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை .

இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தவேண்டு வலியுத்தினார். போல் யோங் சு கியோங்கை இந்த விவகாரத்தில் சிக்கவைக்க சதி நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

The post பாலியல் பலாத்கார விவகாரம் ; குற்றத்தை மறுத்த போல் யோங்  appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *