பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி.!

  • 10 months ago
  • 0 0

8 வயதே ஆன விக்டோரியா என்கிற சிறுமி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தான் டிராகன்-களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி தெரிவித்து இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் அனுப்பி வைத்திருந்தார், இந்திய மதிப்பில் ரூ.225 ஆகும்.

சிறுமி அனுப்பிய வேடிக்கையான கடிதம் என்று புறக்கணிக்காமல் அதற்கு பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் ஜெசிந்தா அதில் டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை என அதில் கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *