பூமியை நெருங்கி வரவுள்ள ஆபத்து!

  • 5 months ago
  • 0 0

பூமிக்கு மிகவும் அருகில் சிறிய விண்கல் ஒன்று கடந்து செல்­ல உள்­ள­தாக அமெ­ரிக்க நாசா விண்வெளி முகவர் நிலையம் கூறுகி­றது.

இந்த விண்கல் நாளை பூமியை அண்மித்து செல்ல உள்ளது.

2000 Q.W.7 என்ற மேற்­படி விண்கல் நாளைய தினம் பூமி­யி­லி­ருந்து சுமார் 14000 மைல் தொலைவில் கடந்து செல்­ல­வுள்­ளது.

இந்த விண்கல் இது­வரை பூமி­யி­லி­ருந்து 3.3 மில்­லியன் மைல் தொலைவு வரை­யான தூரத்தில் கடந்து சென்­றுள்ள நிலையில் அந்த விண்கல் பூமியை மிகவும் நெருங்கிக் கடந்து செல்லும் சம்­ப­வ­மாக இது கரு­தப்­ப­டு­கின்றது.

இந்த நி­லையில் ஐரோப்­பிய விண்வெளி முகவர் நிலை­ய­மா­னது தற்­போ­துள்ள விண்­கற்­களில் 878 விண்­கற்கள் எதிர்­வரும் 100 ஆண்­டு­க­ளுக்குள் பூமியின் மீது மோதும் அபாயம் உள்­ள­தாக எச்­ச­ரித்­துள்­ளது.

அந்த விண்­கற்­களில் மிகச் சிறிய விண்­கல்­லொன்று மோதும் பட்­சத்தில் பாரிய அழிவை ஏற்­ப­டுத்தும் என அந்த முகவர் நிலையம் மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *