பெற்ற குழந்தையால் தனது உயிரை இழந்த இளம் தாய்!

  • 5 months ago
  • 0 0

பெலாரஸில் இரண்டு வயது குழந்தை தவறுதலாக அழுத்திய பட்டனில் தாயின் உயிரே பறிபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சோக சம்பவம் தொடர்பில் தெரியவருகயைில்…

யூலியா ஷர்கோ என்ற இளம் பெண், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி தனது 21 ஆவது பிறந்தநாளை தோழிகளோடு கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய பின், BMW E34 காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தனது 2 வயது மகளை, கார் கதவைத் திறக்காமல் ஜன்னல் வழியாக தூக்க முற்பட்டுள்ளார்.

அப்போது யூலி எதிர்பாராதவிதமாக குழந்தை தானியங்கி சாளர அடைப்பானுக்கான பட்டனை அழுத்தியதால் யூலியாவின் கழுத்து அதில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில் வெகு நேரமாகியும் மனைவியை காணவில்லை என அவரது கணவர் வெளியே வந்து பார்த்தபோது, யூலியின் கழுத்து காரின் ஜன்னலில் சிக்கி அவர் மயங்கிக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின் ஜன்னல் கதவை உடைத்து தனது மனைவியை மீட்ட கணவர், அவசர உதவி எண்ணை அழைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

நினைவு திரும்பாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் யூலி.

இந்நிலையில் மூளைக்கான ஆக்சிஜன் தடைபட்டதால் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்துக்கு பின் யூலி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதால் பலரும் யூலிக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பலரும் இது தொடர்பில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதாவது யூலி கார் கதவை திறக்காமல் ஜன்னல் வழியே தனது குழந்தையை தூக்காமல் கார் கதவை திறந்து பிள்ளையை தூக்கியிருந்தால் இந்த துயரம் நிகழ்ந்திருக்காது, எது எவ்வாறு இருப்பினும் இந்த சம்பவம் ஏனைய பெற்றோருக்கு ஒரு படிப்பினையே என பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *