விராட் கோலியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது

  • 6 months ago
  • 0 0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி டுவிட்டரில் Virat Kohli (@imVKohli) என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார். கிரிக்கெட் குறித்த தகவல்கள் மற்றும் பொதுவான சில தகவல்களை அதில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

விராட் கோலியிடம் இருந்து தகவலை பெறுவதற்காக அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்கிறார்கள். அந்த வகையில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3 கோடியை தாண்டியுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி ‘‘டுவிட்டரில் 30 மில்லியனை கடக்கும்போது என்னுடைய ரியாக்சன்… விரும்பும் மற்றும் ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி’’ என வீடியோ கிளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *