ஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர்

  • 6 months ago
  • 0 0

கோலாலம்பூர், ஆக.18 – அண்மையில் இனங்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டிருப்பதன் மூலம் ஸாக்கிர் நாய்க் இனவாதத்தைத் தூண்டக்கூடிய வகையில் செயல்பட்டிருக்கிறார் என தெளிவாக தெரிகிறது என பிரதமர் துன் மஹாதீர் கூறியுள்ளார்.

மலேசிய சீனர்கள் முதலில் திரும்பிப் போக வேண்டும் என்றும் மலேசிய இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்பியதன் வழியும் ஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார். வெளிநாட்டவரான அவருக்கு வழங்கப்பட்ட நிரந்தர குடியுரிமை சலுககைகளை அவர் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ஸாகிர் மீது போலிஸ் மேற்கொண்டுள்ள விசாரணையைத் தாம் ஆதரிப்பதாகவும் மஹாதீர் குறிப்பிட்டார்.

அவர் இஸ்லாம் பற்றி பேசவோ பிரச்சாரம் செய்யவோ எந்த தடையும் இல்லை. ஆனால் அரசியலில் ஈடுபட முடியாது. அதை அவர் மீறியிருப்பது தெரிகிறது.

முதலில் அவருக்கு யார் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து கொடுத்தது என எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நிரந்தர குடியுரிமை பெற்றவர் என்ற முறையில் அவர் அரசியலில் ஈடுபடமுடியாது என்றார் மஹாதீர்.

ஸாக்கிரை கண்டிக்கும் வகையில் மஹாதீர் பேசியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஸாக்கிர் எல்லையை மீறிவிட்டார்; இனவாத அரசியலை நுழைக்கப் பார்க்கிறார்- மஹாதீர் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *