123-வது வயதில் உலகின் மிக வயதான மனிதர் இறந்தார்

  • 10 months ago
  • 0 0

மாஸ்கோ, மே. 15- உலகிலேயே மிக வயதான மனிதர் எனப்படும் அப்பாஸ் இலிவ் தனது 123-வது வயதில் காலமானார். 8 பிள்ளைகள், 35 பேரப்பிள்ளைகள் மற்றும் 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளைக் கொண்ட இவர்; தனது நீண்ட ஆயுளின் ரகசியம் 11 மணி நேர தூக்கம் தான் என்று தமது பிள்ளைகளிடம் கூறியுள்ளார்.

இங்குஸ் இனத்தைச் சேர்ந்த இவருக்கு தொலைக்காட்சிப் பார்ப்பதில் ஆர்வம் இல்லை என்பதும் மது, சிகரேட் போன்றத் தீயப் பழக்கங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ரஷ்யாவிலுள்ள குலி என்றக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் தனது
சொந்தப் பண்ணையில் வளர்த்தக் கோழி ஆடுகள் மற்றும் தோட்டத்தில் பயிரிட்ட காய்கறிகளை மட்டுமே உண்பார் என்ற தகவலைச் செய்தித்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் பிறந்த இவர் ஆட்டு பண்ணையில் வேலை செய்த பின் ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டம் உலகப் போரில் நாட்டுக்காக தனது சேவையை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post 123-வது வயதில் உலகின் மிக வயதான மனிதர் இறந்தார் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *